ஈரோடு டிச., 3
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சியில் நியமன உறுப்பினர் பதவி ஏற்றுக்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளாட்டம் பரப்பு பேரூராட்சியில் நியமன உறுப்பினருக்கான தேர்வு நடைபெற்றது. இதில் பாலசுப்பிரமணியன் என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கான நியமன உறுப்பினர் பதவிப்பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி, வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன உறுப்பினர் பதவிக்கான, பதவி ஏற்கும் நிகழ்ச்சியில், வெள்ளாட்டம் பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் ராமச்சந்திரன், நியமன உறுப்பினர் பாலசுப்பிரமணியத்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வெள்ளாட்டம் பரப்பு பேரூராட்சி தலைவர் சத்யா சண்முகம், துணைத் தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் பங்கேற்று கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்