சிறப்பாக நடைபெற்ற தீர்த்த திருவிழா..
ஈரோடு. மார்ச். 30
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ அழகு மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகே உள்ள கிருஷ்ணம் பாளையம் சித்தன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அழகு மாரியம்மன் கோவில் பங்குனி மாத பெரும் திருவிழா மற்றும் 26 ஆம் ஆண்டு தீர்த்த ஊர்வலம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த 24/3/2026 செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வரும் இந்த திருவிழா, வருகின்ற5/4/2026 ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற
உள்ளது.
கணபதி ஹோமம் செய்து பூச்சாற்றுதலுடன் தொடங்கிய இந்த கோவில் விழாவில், அன்னதானம் வழங்குதல், மாவிளக்கு எடுத்தல், என தினம் தோறும் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு பூஜைகள் அம்மனுக்கு செய்யப்பட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அம்மனை தரிசித்து வணங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணம்பாளையம் சித்தன் நகர் பகுதி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் அம்மன் சக்தி அழைத்து ஊர்வலமாக சென்று ஈரோடு சின்ன மாரியம்மன் மற்றும் பெரிய மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தனர்
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அறிமுக சரி அழகு மாரியம்மன் கோவில் திருவிழா குழுவினரும் மற்றும் ஊர் பொதுமக்களும், பக்த கோடிகளும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

More Stories
கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
அரியலூர் – லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நந்தியம்பெருமான் சுயசாம்பிகை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தைக் காணத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்