காடுவெட்டி குரு இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என காடுவெட்டி குருவை நினைவுகூர்ந்த அன்புமணி ராமதாஸ்
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஒரு வன்னியர் கூட திமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது எனவும் அறை கூவல்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ் அணியின் சார்பில் உரிமை மீட்க தலைமூறை காக்க நடைபயணத்தின் முடிவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்பொழுது உங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே இந்த நடைபயணத்தின் முக்கிய நோக்கமாகும். அதன் அடிப்படையிலேயே இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறேன். ஊழல் திமுக ஆட்சியை விரட்டி அடியுங்கள். தூக்கி எறியுங்கள் அடுத்தது நமது ஆட்சி உறுதியாக வரும். லட்சக்கணக்கான மக்கள் மாற்றம் வரவேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் சோழர்கால பாசன திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நடைப்பயணம் துண்டு பிரசுரம் வழங்குவது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஆனால் இது குறித்து இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் வறண்டே காணப்படுகிறது. இந்த பாசன ஏரிகளுக்கு அருகில் சில கிலோமீட்டர் தூரத்தில் செல்லும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வீனாக கடலில் கலக்கும் நீரை ஏரியில் நிரப்ப நடவடிக்கை எடுக்காத துப்பில்லாத ஆட்சியாக உள்ளது. இதனை தூக்கி எறிய வேண்டுமா வேண்டாமா. இந்த ஆட்சியை என்னிடம் கொடுங்கள் தமிழகத்தின் தலையெழுத்தை என்னால் மாற்ற முடியும். ஆறு மாதம் பொருத்து இருங்கள் நமது ஆட்சி வரும் நமது கூட்டணியின் ஆட்சி வரும் ஆட்சி வந்த உடன் ஒரே மாதத்தில் சோழர் பாசன திட்டத்தை நான் அறிவிப்பேன். மூன்றாண்டு காலத்தில் இந்த திட்டத்தை என்னால் நிறைவேற்ற முடியும். 2500 கோடி ரூபாய் செலவு செய்தால் அனைத்து ஏரியிலும் கொள்ளிட நீரை நிரப்ப முடியும். ஆனால் விளம்பரத்திற்காக பொன்னேரியை தூர்வார பன்னிரண்டு கோடியை அறிவித்தார்கள் வெறும் அறிவிப்பாகவே உள்ளதுக்ஷ தமிழ்நாட்டை நாசப்படுத்தியது போதும் இவர்களுக்கு எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற விவஸ்தையே கிடையாது. ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்ன என தெரியுமா நீர் மேலாண்மை என்றால் என்ன என்பது தெரியுமா தெரியாது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு உரிமையும் இழந்து கொண்டிருக்கிறோம் கருணாநிதி காலத்தில் கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தார். இது குறித்து கருணாநிதி வாயை தொறக்கவில்லை. காவேரி உரிமையை இழந்து விட்டோம் இவ்வாறு ஒவ்வொரு உரிமையும் இழந்து கொண்டிருக்கிறோம். மீண்டும் திமுக ஆட்சி வந்தால் ஒவ்வொன்றையும் விளம்பரப் படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள். எனவே ஊழல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்துவிட்டது வரும் டிசம்பர் 17ஆம் தேதி ஒரு சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளேன் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்தி அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் இந்தப் போராட்டம் எனது தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் படிப்பு வேண்டும் வேலை வேண்டும் என்பதற்காக தான். இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக உள்ளேன். வேண்டுமென்றே ஒரு சமுதாயத்தை ஒழிக்க வேண்டும் ஒரு சமுதாயத்தை அழிக்க வேண்டும் படிக்கக்கூடாது வேலைக்கு போகக்கூடாது இந்த சமுதாயம் அடிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ன்னிர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்காமல் இருக்கின்றார். அதனால் தான் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஒரு வன்னியர் கூட திமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது வன்னியர்களின் துரோகி ஸ்டாலின். முதலமைச்சர் வன்னியர்களுக்கு திமுக இவ்வளவு பெரிய துரோகம் செய்துள்ளது. இதை சிந்தித்து பார்க்க வேண்டும் எனவே டிசம்பர் 17 முக்கியமான போராட்டம். இந்த நேரத்தில் காடுவெட்டி குரு என்னுடன் இல்லை என்பது என்னுடைய மிகப்பெரிய வருத்தம். காடுவெட்டி குரு என்னுடன் இருந்திருந்தால் நமது கட்சியில் இந்த குழப்பங்கள் எல்லாம் வந்திருக்காது. அவர் இருந்திருந்தால் இன்னைக்கு திமுகவின் கைக்கூலிகள் ஐயாவை சுற்றி சுற்றி ஐயாவின் மனசை மாற்றி ஐயாவை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். காடுவெட்டி குரு இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அதனாலதான் காடுவெட்டி குரு இல்லாதது மிகவும் மன வேதனையாக உள்ளது. இதையெல்லாம் மீறி நாம் முன்னேறுவோம். நமது இலட்சியத்தை அடைவோம் உறுதியாக அடுத்த ஆட்சி நமது ஆட்சி. நீங்கள் முடிவு பண்ணினால் நான் கையெழுத்தை போடுவேன் என்னால் போட முடியும் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் அந்த கையெழுத்தை நாம் போடும் சூழல் ஏற்படும். இதற்காகவாவது நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் நமது உரிமையை மீட்டெடுப்பேம் என பேசினார் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ் அணியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

More Stories
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.
கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக் – சேலம் தவெக மீட்டிங்கில் செங்கோட்டையனுக்கு அவமரியாதையா!?.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் நடத்தும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.