July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரசு கல்லூரியில்உலக மக்கள் தொகை நாள் உறுதிமொழி ஏற்பு

ஜூலை, 14 அறந்தாங்கி.

புதுக்கோட்டை மாவட்டம்
ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக மக்கள் தொகை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்.

உலக மக்கள் தொகை நாள் உறுதிமொழி முதல்வர் சார்பில், வாசித்தளிக்கப்பெற்றது. துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், அலுவலகப்பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

செய்தியாளர்
பழனிவேல்