June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அமைச்சர்கள்,, ஆட்சியர்,, அரசு உயர் அதிகாரிகள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம்…

எந்த ஒரு அரசு சார்பு பொறுப்பிலும் இல்லாத ஒரு நபர் ஆய்வு மேடையில் அமர வைக்கப்பட்டது ஏன்..?

இதற்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் சொல்லும் விளக்கம் என்ன..?

ஈரோடு. ஜூன் 01

எந்த ஒரு அரசு பொறுப்பிலும் இல்லாத ஒரு நபர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற, அமைச்சர்கள் அதிகாரிகள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்ட முக்கிய அரசு ஆய்வுக் கூட்டத்தில் மேடையில் அமர வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்செய்யும், கேள்விகளையும் எழுப்பி உள்ளது. இதற்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் சொல்லப் போகும் விளக்கம் என்ன என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்திற்கு வருவாய் துறை அமைச்சர் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் என இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பிலும், சரி துணி நூல் மற்றும் கதர் துறை சார்பிலும் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மற்ற துறைகளில் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. சாமி தலைமை வகித்தார்.

இதில் கலந்துகொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன், கைத்தறி துணி நூல் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் எம். விஜய் பாலாஜி ஆகிய இரு அமைச்சர்களும் தங்களின் துறைகள் சார்ந்த பணிகள் குறித்தும் மற்றும் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் மட்டும் கெட்ட பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ் ரூதி, எம்எல்ஏக்கள் ஈரோடு மேற்கு ஆனந்த மோகன், அந்தியூர் ஹரி பாஸ்கர், பவானிசாகர் தமிழ்ச்செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர்சு. சாந்தகுமார் உள்ளிட்ட மாவட்ட உயர் அதிகாரிகளும், துறைகள் சார்ந்த முக்கிய அதிகாரிகளும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்தின் போது அமைச்சர்கள், ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட மிக முக்கிய நபர்கள் மேடையில் அமர்ந்திருந்த நிலையில், துறை சார்ந்த அதிகாரிகள் அதன் எதிர்புறம் கீழ்பகுதியில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். இது எப்பொழுதும் இருக்கும் இயல்பான நடைமுறை.

ஆனால் இந்த இயல்பான நடைமுறைக்கு மாறாக, சட்ட விதி மீறலாக, முக்கிய நபர்கள் அமர்ந்திருந்த அதே மேடையில், அரசு சார்ந்த எந்த ஒரு ஆட்சி பொறுப்பு மற்றும் அரசு பொறுப்புகளும் இல்லாத ஒரு தனிநபர் அந்த ஆய்வு மேடையில் அமர வைக்கப்பட்டு இருந்தது, அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களிடையே ஒரு பெரும் அதிர்ச்சியும், பெரும் கேள்வியையும் எழுப்பியது.

அந்த இடத்தில் கோபிசெட்டிபாளையம் கோட்ட ஆட்சித் தலைவர் அமர வேண்டிய இடம். அப்படி இருக்கும் பொழுது ஒரு முக்கியமான அரசு துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில், செய்தியாளர்களே போட்டோ, வீடியோ எடுக்க 5 நிமிடம் நேரம் தான் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த ஐந்து நிமிட நேரம் கடந்ததும் மாவட்ட ஆட்சியரே தன்னுடைய மைக்கில் செய்தியாளர்கள் வெளியேற வேண்டும் என்று பேசுகிறார். மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலரும், போட்டோ மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த செய்தியாளர்களை வெளியே செல்லுமாறு கட்டாயப்படுத்தினார்.

ஆனால் எந்த ஒரு அரசு சார்ந்த பொறுப்பிலும் இல்லாமல் இன்றைக்கு ஆளும் கட்சியாக உள்ள ஒரு அரசியல் கட்சியில் ஒரு ரூபாய் உறுப்பினராக சேர்ந்த அந்த நபர் அந்த இடத்தில் அமரலாமா, ஈரோடு மாவட்ட நிர்வாகம் அதற்கு அனுமதி வழங்கலாமா, இது அப்பட்டமான அரசு துறை சார்ந்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தில் நடைபெற்ற ஒரு அப்பட்டமான அரசு விதிமீறல் ஆகாதா..,?. சம்பந்தப்பட்ட அந்த நபர் ஒரு முன்னாள் அமைச்சராக இருக்கலாம். ஆனால் தற்போது அவர் அமைச்சராக இருந்த கட்சியும் ஆட்சியில் இல்லை, சம்பந்தப்பட்ட அந்தக் கட்சியிலும் தற்போது அவர் இல்லை, ஆளுங்கட்சியின் ஒரு உறுப்பினராக இருப்பது, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மிக முக்கியமான துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் அமர்ந்திருக்கும் வரிசையில் இவர் எந்த அடிப்படையில் அமர்ந்திருந்தார், அல்லது அமர வைக்கப்பட்டிருந்தார்.

சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், பத்திரிக்கை ஊடகவியலாளர்களும் கேள்வி எழுப்பும் நிலையில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் இதற்கு என்ன விளக்கம் தர போகிறது. பொறுத்து இருந்து பார்ப்போம்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் அந்த முக்கிய அரசு துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு மேடையில் அரசு விதிகளை மீறி அமர்ந்திருந்த அந்த நபர் முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.