வந்தவாசி, ஜூலை 05:
சுவாமி விவேகானந்தரின் நினைவு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் வெண்குன்றம் பாரத் வித்யாலயா பள்ளியில் ‘விவேகானந்தரின் வீர சிந்தனைகள்’ என்ற தலைப்பில் உரையரங்கம் மற்றும் விவேகானந்தரின் பொன்மொழிகள் ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் எஸ். காசி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ப.சக்ரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வர் புலவர் ஏழுமலை வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்க செயலாளர் ஆ.மயில்வாகனன் பங்கேற்று, விவேகானந்தரின் வீர சிந்தனைகள் பற்றிய கருத்துரைகளை மாணவர்களுக்கு வழங்கினார். மேலும் நூலகர் ஜா. தமீம் விவேகானந்தரின் பொன்மொழிகளை மாணவர்களுக்கு விளக்கினார். இந்த நிகழ்வில் விவேகானந்தர் வேடமிட்டு பேச்சு போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக, பொன்மொழிகள் பதாகைகள் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இறுதியில் பள்ளி ஆசிரியை ஷீலா நன்றி கூறினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்