June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி – கல்வி வளர்ச்சி குறித்து நடைபெற்ற கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான அரசு நலத்திட்டங்களை விளக்கும் கூட்டத்தில் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தமிழகத்தில் உயர்கல்வி வளர்ச்சி அடைவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குச் செயல்பாடுகளே காரணம் என குறிப்பிடப்பட்டது. மாநிலத்தில் 52% மாணவர்கள் உயர்கல்வி பயில்வது, பிற மாநிலங்களை விட உயர்ந்த சாதனை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலைஞர் மு. கருணாநிதி அறிமுகப்படுத்திய இலவச மிதிவண்டி திட்டம், இலவச பஸ்பாஸ் உள்ளிட்ட நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன. இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.
அரசு ஆண்கள் பள்ளியில் 255 மாணவர்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 385 மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்நிலையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஏழை குடும்ப மாணவர்கள் உலகப் பல்கலைக்கழகங்களில் படிக்க அரசு முழு உதவி செய்து வருகிறது. இந்த ஆண்டு 172 மாணவர்களுக்கு ஒருவர் ரூ.36 லட்சம் செலவில் உதவி வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடப்பட்டது.

செஞ்சி மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு, அரசு கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல உயர்கல்வி நிறுவனங்கள் வழங்கப்பட்டுள்ளன. செஞ்சி அரசு கலைக்கல்லூரி புதிய கட்டிடம் ஸ்டார் ஹோட்டலைப் போன்ற முறையில் கட்டப்பட்டு மாணவர்களுக்கு சிறந்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டது.

மேலும் பள்ளி மாணவிகள் கேட்ட கோரிக்கையை அடிப்படையாக கொண்டு மேல்நிலைப் பள்ளிக்கான புதிய கட்டிடமும் இந்த ஆண்டில் உருவாக உள்ளது என அறிவிக்கப்பட்டது.

செஞ்சி மற்றும் அவலூர்பேட்டை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கடந்தாண்டு பெற்ற முதல் மற்றும் இரண்டாம் நிலை கல்விச்சாதனைகளைப் பாராட்டி கூட்டம் நிறைவு பெற்றது.

செஞ்சி – இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

பள்ளி மாணவர்கள் அனைவரும் தமிழ் தாய் வாழ்த்து பாடியதன் பின்னர், முன்னாள் அமைச்சர் மற்றும் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெ. அறிவழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெற்றோர்–ஆசிரியர் கழக தலைவர் சி. மாணிக்கம், ஆ. திலவதி முன்னிலையில் மாவட்ட கல்வி அலுவலர் ஆ. உதயசூரியன் வரவேற்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஒன்றியக் குழு தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அமுதா ரவிக்குமார், அரங்க ஏழுமலை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

பள்ளி துணை ஆய்வாளர் இ. சங்கர், அஞ்சலை நெடுஞ்செழியன், கே. பொன்னம்பலம், சுமித்ரா சங்கர், சங்கீதா சந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.