விழுப்புரம் மார்ச் 19
விழுப்புரம் இ.எஸ்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இ.எஸ் செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமை மையம் திறப்பு விழா நடைபெற்றது .
இம்மையம் கல்லூரியின் கூட்டியக்க நிறுவனமான இ எஸ் எஸ் எம் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டது இம்மையத்தின் முதன்மை நோக்கம் மாணவர்களுக்கு செயற்க்கை நுண்ணறிவு துறையில் திறன் பயிற்சி அளிப்பதுடன் புதுமை திறன் மேம்பாடு மற்றும் நிஜ வாழ்க்கை தேவைகளுக்கான செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை உருவாக்கும் செயல்முறை தளமாக விளங்குகிறது.
மையத்தினை இ எஸ் கல்வி குழுமத்தின் தலைவர் பொறியாளர் செல்வமணி தலைமை தாங்கினார்
சிறப்பு அழைப்பாளராக அமெரிக்காவில் உள்ள எஸ் கே சி ஐ டி சொல்யூஷன் நிறுவனத்தின் இயக்குனர் வெங்க நாக முரளி கோனடம் கலந்து கொண்டு மையத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்
பொறியியல் கல்லூரி முதல்வர் இந்திரா இம்மையத்தின் நோக்கம் மற்றும் பணி குறிக்கோளை விலக்கி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன் மற்றும் இ எஸ் கல்வியல் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில் முருகன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்
நிகழ்ச்சியில் இ எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்