விழுப்புரம் ஏப் 11
விழுப்புரம் இ எஸ் கல்வியல் கல்லூரியில்
தமிழ் மன்ற விழா நடைபெற்றது .
நிகழ்ச்சிக்கு இ எஸ் கல்வி குழுமத்தின் தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார்.
இ எஸ் கல்வியல் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் தட்சிணாமூர்த்தி துணை பேராசிரியர் முனைவர் மணி கண்ணன் விழுப்புரம் எம் ஜி ஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை மதிப்புறு விரிவுரையாளர் இளவரசி கலந்துகொண்டு சங்க கால அறம் ,திருக்குறள் உணர்த்தும் வாழ்வியல் அறம், நவீன இலக்கியங்களில் வாழும் அறம், போன்ற தலைப்புகளில் சிறப்புரையாற்றினர். இதில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கவிதை தொகுப்பினை கல்லூரி முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் தலைமையில் வெளியிட்டனர் .மேலும் இக்கல்லூரி மாணவர்கள் திருக்குறள் ஒப்பித்தல் வில்லுப்பாட்டு மொழிப்போர் தியாகிகள் வரலாறு பாரதியார் பாட்டு மணல் ஓவியமீட்டுருவாக்கம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று தன் திறமைகளை வெளிப்படுத்தினர். இதன் வாயிலாக தமிழ் மொழியின் தொன்மை சிறப்பு வளமை முக்கியத்துவம் ஆகியவற்றை மாணவர்களுக்கு தெளிவாக புரியும் வண்ணம் எடுத்துரைத்து விளக்கினார்கள். இதில் இ எஸ் கல்வியியல் கல்லூரி துணை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் இ எஸ் கல்வியல் கல்லூரியில் தமிழ் மன்ற விழா

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்