July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

“விழுதுகள்’ மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மையம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு..

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் பல்வேறு தகவல்களை தெரிவித்து ஆட்சியர் ச. கந்தசாமி..

ஈரோடு. ஜூலை
11

விழுதுகள் மாற்று திறனாளிகளுக்கான சேவை மையங்கள் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் ஈரோடு ஆட்சியர் கந்தசாமி பல்வேறு தகவல்களை தெரிவித்தார்

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கந்தசாமி செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அனைத்து வகையான மாற்று திறனாளிகளுக்கும் கிடைக்க வேண்டிய மறுவாழ்வு சேவை மையம், அரசின் சார்பில் வழங்கப்படும் நல திட்ட உதவிகள் அனைத்தும் அவர்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் விழுதுகள் என்ற ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுத்த துவங்கி உள்ளதாக ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உலக வங்கி நிதி உதவியுடன், செயல்படுத்தி வரும் நல திட்ட உதவிகள் அனைத்தும் விழுதுகள் சேவை மையத்தின் மூலமாக தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் இனி செயல்படுத்தப்படும்.

21 வகையான மாற்றுத்திறனாளிகள்

இவர்களுக்கு தேவையான அனைத்து மறுவாழ்வு உதவிகளும் இந்த சேவை மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் 2 போட்ட அளவிலான விழுதுகள் சேவை மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மையங்களில் நிபுணர்கள் மூலம் தரமான மறுவாழ்வு இலவசமாக தரமான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிசியோதெரபி, ஆக்குலேஷன் தெரபி, பேச்சுப் பயிற்சி மொழிசார் பயிற்சி உள்ளிட்ட பல மறுவாழ்வு சேவைகள் இந்த மையங்களில் வீட்டின் அருகிலேயே வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமாக 255 முன் களப்பணியாளர்கள் மாவட்ட முழுவதும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அதே நேரம் இவர்கள் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மாற்று திறனாளிகள் வீட்டிற்கு நேரில் சென்று அரசின் சேவைகள் குறித்தும், அவற்றை பயன்படுத்திக் கொள்ளும் முறைகள் குறித்தும், அவர்களுக்கு நேரடியாக விளக்கம் அளிப்பார்கள். அதோடு அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

அதேபோல் கிராமப்புறங்கள், நகரப் புறங்களில் வசிக்கும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசின் மறுவாழ்வு மையத்தின் மூலம் அனைத்து வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட சிறப்பான முறையில் இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவை மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு செய்தியாளர்கள் மத்தியில் ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது,. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( பொது ) தேன்மொழி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சங்கர் கணேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு மகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.