August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வழூர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் தேரோட்டம்: ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பங்கேற்பு

வந்தவாசி, ஆக 24:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழூர் கிராமத்தில் பிறந்த ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளுக்கு புதியதாக தேர் வடிவமைக்கப்பட்டு நேற்று முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. பம்பை உடுக்கை முழங்க, மேளதாளத்துடன் உற்சவ மூர்த்தி அமர்ந்த கோலத்தில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக, மஹாரண்யம் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். மேலும் இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கடந்த இரு நாட்களாக யாகசாலை பூஜைகள், வேத பாராயணம் உள்ளிட்டவை நடந்தேறியது. இந்த வைபவத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.