வந்தவாசி, ஆக 22:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒத்தவாடை செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் சிந்தனை அரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க தலைவர் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தகவல் தொடர்பாளர் சு.அகிலன் வரவேற்றார். செயலாளர் ஆ.மயில்வாகனன் முன்னிலை வகித்தார். இதில்
கவிஞர் கண்ணதாசன், உவமைக் கவிஞர் சுரதா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், எழுத்தாளர் சுஜாதா ஆகியோரின் பெயர் தலைப்புகளில் சிறப்பு பேச்சரங்கம் நடைபெற்றது. இந்த பேச்சரங்கத்தில் மழையூர் வீ.தமிழரசன், ஏ.செல்வராஜ், பெ.அழகேசன், ஜ. ஜான்சிராணி ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வை இணைச் செயலாளர் ஏழுமலை தொகுத்து வழங்கினார். இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். இறுதியில் சங்க துணை தலைவர் கோ. ஸ்ரீதர் நன்றி கூறினார்.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…