வந்தவாசி, நவ 20:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் இணைந்து 58 ஆவது தேசிய நூலக வார விழாவை கிளை நூலகத்தில் நடத்தியது. இந்த நிகழ்விற்கு கிளை நூலகர் சி. சேகர் தலைமை தாங்கினார். பையூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.விஜயகுமார், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா.கதிரொளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஆ.மயில்வாகனன் தொடக்கவுரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க வந்தவாசி கிளைத் தலைவர் பூங்குயில் சிவக்குமார் பங்கேற்று, புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார். மேலும் திருவண்ணாமலை முதுகலை ஆசிரியர் உ.கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பரங்கிப் பூ பூப்பதை பார்க்க நேரமில்லை’ கவிதை நூலைப் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார். கலைச் சுடர்மணி பெ. பார்த்திபன் தமிழிசை பாடல்களை பாடினார். இந்த நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு புத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டது. கவிஞர் தமிழ்ராசா, வந்தவாசி வட்ட தமிழ்ச்சங்க தகவல் தொடர்பாளர் கவிஞர் மு.பிரபாகரன், சமூக ஆர்வலர் ஆ.பொன்னம்பலம், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் ஜி.விநாயக மூர்த்தி மூன்றாம் நிலை நூலகர் சு.சங்கர், கலைஞர் முத்தமிழ் சங்க தலைவர் வந்தை குமரன், புலவர் ஏ.ஏழுமலை உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்வில் வீனஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் ரெட் கிராஸ் அ.ஷாகுல் அமீது, சமூக ஆர்வலர்கள் முகமது ஜியா, ஓய்வுபெற்ற கல்வித்துறை அலுவலர் ஜெயக்கண்ணு, இயக்குநர் விஜய் ஆதிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் தலைமை ஆசிரியர் மயில்வாகனன், சமூக ஆர்வலர்கள் விஜயகுமார், ஜெயக்கண்ணு ஆகியோர் ரூபாய் 1000/- செலுத்தி நூலக புரவலர்களாக இணந்தனர். இறுதியில் நூலக அலுவலர் மு.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!