வந்தவாசி , ஜன 06:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சியின் 11ஆவது வார்டு பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது .ரூபாய் 5 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள இப்பணிக்கான பூமி பூஜையை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். மேலும் இந்த நிகழ்வில் வந்தவாசி நகர செயலாளர் தயாளன், நகர் மன்ற தலைவர் ஜலால், துணைத் தலைவர் அன்னை சீனிவாசன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ராஜேந்திரன், உதவிப் பொறியாளர் கருணாகரன், முன்னாள் நகர் மன்ற தலைவர் அப்சர் லியாகத், நகர் மன்ற உறுப்பினர் பர்வீன், நகர் மன்ற உறுப்பினர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்