வந்தவாசி, டிச 13:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மூடூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அலர்மேல்மங்கை சமேத ஶ்ரீசீனிவாச பெருமாள் கோவிலில் வருட உற்சவ விழா இரண்டு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. முதல் நாள் உற்சவத்தில் அங்குரார்பணம், விசேஷ ஹோமம், பூர்ணாஹுதி,
சாற்றுமுறை உள்ளிட்டவை நடந்தேறியது. தொடர்ந்து இரண்டாம் நாள் கோ பூஜையுடன் கூடிய வருட உற்சவம் தொடங்கியது. பிறகு தன்வந்திரி பகவான் ஹோமங்கள், பிரபந்த தனியன்கள், தேசிக பிரபந் பாராயணம் நடைபெற்றது. பிறகு மூல மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் திருமஞ்சனம் நடந்தேறியது. இஞ்சிமேடு பாலாஜி ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

More Stories
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிரதமரின் பன்னிரண்டு ஆண்டு கால நல்லாட்சியை முன்னிட்டு நாட்டுக்குப் பயன்படும் வகையில் ஒரு நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும் . என்ற நோக்கத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டது விழா நடைபெற்று வருகிறது.மாநிலத் தலைவர் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின், ஆணைக்கிணங்க திருச்சிமாவட்ட புறநகர் தலைவர் அஞ்சாநெஞ்சன் அவர்களின், ஆலோசனின் படி மணப்பாறை நகர் மண்டலில் நகர தலைவர் சுரேஷ் தலைமையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டது விழாவில் மாவட்ட பொதுச்செயலாளர் பொன்னுவேல் மாவட்ட அமைப்பு சாரா பிரிவு செயலாளர் வீரப்பன் மண்டல் பொதுச் செயலாளர் ராஜா மண்டல் செயலாளர் ஆரோக்கியசாமி கிளை தலைவர் சதீஷ்குமார் மகளிர் அணியைச் சார்ந்த ராஜராஜேஸ்வரி வெண்ணிலா மற்றும் பல பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மகா மாரியம்மன் கூழ்வார்த்தல் திருவிழா..!
பிரதமர் மோடியின் ஆயுள் வேண்டி புதுச்சேரி பாஜகவினர் மனக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு!