புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆர்.எல்.வி மக்கள் முன்னேற்ற கழகம் தனது கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், மற்ற கட்சிகளில் இருந்து விலகி அக்கட்சியில் இணையும் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலியார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியும், அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளருமான திருமதி. கீதாமணி அவர்கள் என்.ஆர் காங்கிரஸில் இருந்து விலகி, ஆர்.எல்.வி மக்கள் முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதேபோல், காலாப்பட்டு தொகுதியைச் சேர்ந்த திருமதி. அனிதா அவர்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி, ஆர்.எல்.வி மக்கள் முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கட்சியில் இணைந்த இருவரையும் ஆர்.எல்.வி மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு. ஆர்.எல். வெங்கட்ராமன் அவர்கள் சால்வை அணிவித்து, கட்சியின் துண்டை வழங்கி கௌரவித்து முறைப்படி வரவேற்றார்.
இந்த இணைப்பின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர். மாற்று கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி ஆர்.எல்.வி மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைவது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

More Stories
போலி மருந்து வழக்கில் லஞ்சம், போலீஸ் பாதுகாப்பில் ஹவாலா பணம் கடத்தலா? அரசு பதிலளிக்க தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் சிவா கோரிக்கை
சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா திருப்பூரில் நடைபெற்றஆலோசனைக் கூட்டத்தில் மறுப்பு!!
புதுவை :