வந்தவாசி, ஜூன் 16:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு வைபவம் மற்றும் சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. மூல மூர்த்தி அம்மனுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு அருட்சக்தி ஆறு. லட்சுமணன் ஸ்வாமிகள் மேற்பார்வையில் யாகசாலை பூஜை நடந்தேறியது . இரவு உற்சவ மூர்த்தி அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு வைபவம் நடைபெற்று மேளதாளத்துடன் கோயில் பிரகாரத்தில் பவனி வந்தனர். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

More Stories
நல்லூர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்..!
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிரதமரின் பன்னிரண்டு ஆண்டு கால நல்லாட்சியை முன்னிட்டு நாட்டுக்குப் பயன்படும் வகையில் ஒரு நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும் . என்ற நோக்கத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டது விழா நடைபெற்று வருகிறது.மாநிலத் தலைவர் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின், ஆணைக்கிணங்க திருச்சிமாவட்ட புறநகர் தலைவர் அஞ்சாநெஞ்சன் அவர்களின், ஆலோசனின் படி மணப்பாறை நகர் மண்டலில் நகர தலைவர் சுரேஷ் தலைமையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டது விழாவில் மாவட்ட பொதுச்செயலாளர் பொன்னுவேல் மாவட்ட அமைப்பு சாரா பிரிவு செயலாளர் வீரப்பன் மண்டல் பொதுச் செயலாளர் ராஜா மண்டல் செயலாளர் ஆரோக்கியசாமி கிளை தலைவர் சதீஷ்குமார் மகளிர் அணியைச் சார்ந்த ராஜராஜேஸ்வரி வெண்ணிலா மற்றும் பல பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.