June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாநகராட்சி தேர்தலில் அதிமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் முன்னாள் எம்பி சிவசாமி பேட்டி!!

ஜூன் -01

திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஆக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டு முன்னாள் எம்பி சிவசாமி தற்பொழுது மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். என்னைத் தொடர்ந்து அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். அதன்படி இன்று திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் நிர்வாகிகளை சந்தித்து பேசினார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ஏதோ மாயையில் வாக்களித்து விட்டு மக்கள் ஆதங்கத்தில் உள்ளனர். நாளை தேர்தல் நடந்தாலும் தவெக தோற்கும். அதிமுக வெற்றி பெறும். ஒரு சிலர் சுயநலத்திற்காக சென்றதால் வேட்பாளர் தேர்வு தவறு என சொல்ல முடியாது. அதிக உறுப்பினர் கொண்ட இயக்கம் அதிமுக ஆதவ் அர்ஜுனா அறியாமையில் பேசி வருகிறார் .அவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது. சிறிது சிறிதாக வளர்ந்தவர்கள் நாங்கள். ஒவ்வொரு கட்சியாக தாவி சென்றவர் அவர்கள் அரசியல் தற்குறி. என விமர்சித்தார்.
மக்கள் ஏமாந்து வாக்களித்து விட்டார்கள். சோசியல் மீடியா தாக்கத்தில் கவர்ச்சியில் ஏமாந்து விட்டனர். அடுத்த வீதி, வீடுகளில் வாக்கு கேட்டோம்‌ . ஆனால் எங்கள் வீட்டு வாக்குகளை தக்கவைக்க தவறியது தான் எங்கள் தவறு. பொதுச்செயலாளர் தலைமையில் அதிமுக கட்டுக்கோப்பாக உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து கட்சி தலைவர்களையும் விஜய் சந்தித்தார் ஆனால் எடப்பாடியாரை சந்திக்கவில்லை ஒரு தரப்பை மட்டும் சந்திக்கிறார். இது ஏமாற்று வேலை.அதிகாரிகளை கையாலும் திறன் இல்லாதது தான் சட்ட ஒழுங்கு சீர்கெட காரணம். திடீர் எம்எல்ஏ அமைச்சர் எனும் போது அதிகாரிகளிடம் எப்படி வேலை பெறுவது என துறையை ஆளும் திறன் இல்லை என்பதையே இது காட்டுகிறது. என தெரிவித்தார். நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என அவர் தெரிவித்தார் இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜ் மற்றும் மாநில மாவட்ட பகுதி வட்ட கழக நிர்வாகிகள் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்…