ஏனாமில் நடைபெறவுள்ள புஷ்கர் விழாவிற்கு நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம், மத்திய அரசு உறுதி…
ஏனாமில் அடுத்த ஆண்டு(2027)
ஜூன் 26, முதல் ஜூலை 7 வரை 12 நாட்கள் கோதாரி புஷ்கர புனித யாத்திரை விழா நடைபெறவுள்ளது.
12-ஆண்டுகளுக்கு ஒரு நடைபெறும் புஷ்கர் விழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சமீபத்தில் புதுச்சேரிக்கு வருகைபுரிந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் ஏனாம் புஷ்கர் விழாவிற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ.48.83 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை முதலமைச்சர் ரங்கசாமி அளித்து இருந்தார்.
இந்நிலையில் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது புஷ்கர் விழா ஏற்பாடுகளுக்கு தேவையான ரூ.48 கோடி நிதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார், மேலும் புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கத்திற்கு தேவையான நிதியை வழங்கவும் மத்திய அமைச்சரிடம் , அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கோரிக்கை விடுத்தார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்