ஆய்வின்போது மணப்பாறை எம்எல்ஏ ரா கதிரவன் அதிரடி
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மணப்பாறை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் சா ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்
இதன் ஒரு பகுதியாக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மணப்பாறை நகராட்சியில் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்க ஆய்வின்போது மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் தற்போது நகராட்சியில் காலியாக உள்ள இடங்கள் குறித்தும் நகராட்சியின் மூலம் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும் தற்போது முடிவுற்ற பணிகள் குறித்தும் ஆணையர் கணேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தார்
பின்னர் மணப்பாறை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குப்பைகள் தரம் பிரிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது








விழிப்புணர்வு பேரணியை எம் எல் ஏ ரா கதிரவன் கொடியை அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணி மணப்பாறை நகராட்சி அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையம் வரை துப்புரவு பணியாளர்கள் குப்பைகள் தரம் பிரிப்பது சம்மந்தமாக துண்டு பிரசுரங்கள் வழங்கி ஊர்வலமாக வந்து மணப்பாறை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில்
பொதுமக்களிடம் பெறப்படும் குப்பைகள் மூலம் கிடைக்கும் அதன் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு குறித்தும் எம் எல் ஏ ரா கதிரவன் விளக்கி பேசினார் பின்னர் துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அதன் பின்னர் மணப்பாறை பேருந்து நிலைய வளாகத் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம் எல் ஏ அங்கு செயல்பட்டு வரும் கட்டண கழிப்பறையை பார்வையிட்டு கழிப்பறையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணி காக்க வேண்டும் என்று அங்கு பணியில் இருந்தவர்களிடம் எச்சரித்தார்
அப்போது அங்கு கழிவறைக்கு வந்த பெண்களிடம் குறை நிறைகளை கேட்டார் அப்போது ஒரு பெண்மணி கழிவறை கட்டணம் அதிகப்படியாக வசூல் செய்வதாக எம்எல்ஏவிடம் புகார் தெரிவித்தார்
புகாரின் பேரில் பணியில் இருந்த கழிவறை காப்பாளரிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்ட எம் எல் ஏ ரா கதிரவன் அதிகப்படியான கழிவறை கட்டணம் வசூல் செய்தால் ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என அதிரடியாக மீண்டும் எச்சரித்தார்
மேலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை ஆதார் சிறப்பு மையம் இலவச சிறுநீர் கழிப்பிடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்ல கடை நடத்தி வரும் குத்தகைதாரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் சிரமம் இன்றி வந்து செல்ல நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
பின்னர் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணப்பாறை குப்பை கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார் அதன் பின்னர் மாட்டுச்சந்தையில் இயங்கி வரும் குப்பைகள் தரம் பிரிக்கும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணியில் இருந்த துப்புரவு பணியாளர்களிடம் முறையான பாதுகாப்போடு தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்
எம் எல் ஏ ஆய்வின் போது மணப்பாறை நகராட்சி ஆணையாளர் கணேஷ், சுகாதார அலுவலர் முத்துகணேஷ், உதவி பொறியாளர் சி.பிரகாஷ், துப்புரவு பணி மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்