June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை பகுதியில்பள்ளி கோவில், அருகே செயல்படும் மதுபான கடையை அகற்ற வேண்டும்

சமூக ஆர்வலர் கோல்டு கோபாலகிருஷ்ணன் கோரிக்கை

திருச்சி மாவட்டம் மணப்பாறை திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நொச்சி மேடு( SPG மேல் நிலை பள்ளி) பகுதியை கடந்து பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் மக்கள் மணப்பாறை நகரத்திற்கு செல்ல வேண்டும்

சாலை கடப்பது ஒரு புறம் என்றாலும் தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இந்த கடையில் குடிக்கும் குடிமக்கள் மது போதையில் நான்கு வழி சாலையில் எதிர் திசையில் வருவதால் பல்வேறு விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதேபோல் ஸ்ரீ மயிலாடும் பாறை முருகன் கோயில் தொல்லியில் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது) செவலூர் பிரிவு சாலை அருகே உள்ள மதுபான கடைகள் மற்றும் தனியார் மதுபானக்கூடங்களால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்

தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடைகளை அகற்ற உத்தரவிட்டிருக்கும் நிலையில் மேற்கண்ட செவலூர் பிரிவு சாலை மதுபான கடை மற்றும் நொச்சி மேடு பகுதியில் உள்ள மதுபான கடையை மற்றும் மதுரை ரோட்டில் உள்ள தனியார் மது பானகடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் இதேபோல் பல உயிர்களைப் பழி வாங்கும் நான்கு வழிச்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுத்து அந்தப் பகுதியில் செயல்படும் மதுபான கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்
கோல்டு கோபாலகிருஷ்ணன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

கோரிக்கை நிறைவேற்றப்படுமா?