June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறையில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

மணப்பாறை மே-24

மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரிக்கும் பயிற்சி நடைபெற்றது.

தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திடக்கழிவு மேலாண்மை விதிகள்–2026ன் படி, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஈரக் கழிவு, உலர் கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் சிறப்பு கவனக் கழிவு என 4 வகைகளாக கழிவுகளை பிரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிராம சுகாதார ஊக்குநர்கள் கலந்து கொண்டனர்.

உதவி திட்ட அலுவலர் திரு எஸ்.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற பயிற்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.சண்முகம் முன்னிலை வகித்தார். தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.வி.இராமலிங்கசாமி வரவேற்புரை ஆற்றினார்.

திடக்கழிவு மேலாண்மை திட்ட வல்லுநர் கீர்த்தனா, குப்பைகளை தரம் பிரிக்கும் முறை, சேகரிப்பு மற்றும் பாதுகாப்பான கையாளுதல் குறித்து விளக்கமளித்தார்.

முடிவில் பிரிவு உதவியாளர் கந்தசாமி நன்றி கூறினார்.