வந்தவாசி, ஜூன் 11:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பெரிய காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் உற்ச மூர்த்தி அம்மன் மேளதாளத்துடன் வீதியுலா வந்தனர். தேரடி பகுதியில் அலகு குத்தி அம்மனுக்கு மாலையிடும் வைபவம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

More Stories
வழூர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் தேரோட்டம்: ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பங்கேற்பு
புதுச்சேரி முலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது