February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி மகளிர் காங்கிரஸின் இலவசத் தொழிற்பயிற்சி முகாம் மற்றும் அலுவலகம் திறப்பு விழா!

புதுச்சேரி – புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸின் ஏற்பாட்டில், பெண்களின் திறன்களையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்குடன் இலவச தொழிற்பயிற்சி முகாம் இன்று (19/11/2025) தொடங்கப்பட்டது. பெண்களின் முன்னோடியும், இந்தியாவின் இரும்பு மங்கையுமான அன்னை இந்திராகாந்தி அம்மையாரின் பிறந்தநாளில் இந்தச் சேவைத் திட்டத்தைத் தொடங்குவது பெருமைக்குரியது என்று மாநில மகளிர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இலவச பயிற்சி வகுப்புகளுக்கான தலைமையகத்தை, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் V. வைத்தியலிங்கம் MP அவர்கள் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி A.R. நிஷா அவர்கள் தலைமையேற்றார்.

இந்தத் தொடக்க விழாவில் முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் துணை சபாநாயகர் MNR பாலன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவர்களுடன், காங்கிரஸின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், முதலியார்பேட்டை காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இலவசப் பயிற்சி வகுப்புகள்
மகளிர்கள் சொந்தமாகக் கைத்தொழில் செய்து பொருளீட்ட உதவும் வகையில், பின்வரும் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன:
தையல் பயிற்சி வகுப்புகள்
ஆர்யா வகுப்புகள்
ஸ்போக்கன் இங்கிலீஷ்
ஸ்போக்கன் ஹிந்தி
திறன் மேம்பாட்டு வகுப்புகள்
கணினி வகுப்புகள்

புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் மூலம், அனைத்து மாணவிகளுக்கும் மற்றும் குடும்பப் பெண்களுக்கும் அவர்களின் மாதாந்திர தேவைகளுக்காக எல்லா நாட்களுமே இலவசமாக சானிடரி நாப்கின் பேடுகள் வழங்கப்படுகின்றன.
சானிடரி நாப்கின்களைப் பெற விரும்பும் பெண்கள், மகளிர் காங்கிரஸின் முதலியார்பேட்டை தலைமை தொழிற் பயிற்சி மையத்தில் காலை முதல் மாலை வரை எல்லா நாட்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
இடம்: முதல் தளம், கடலூர் மெயின் ரோடு, முதலியார்பேட்டை.
நாள்: 19/11/2025.
வெளியீடு: A.R.நிஷா, மாநில தலைவி, மகளிர் காங்கிரஸ், புதுச்சேரி.

Facebook
YouTube
Instagram
WhatsApp