புதுச்சேரி தேங்காய்த்திட்டு வன்னிய முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தேங்காய் திட்டு மரப்பாலம் சதுக்கத்தில் தொடர்ந்து விபத்து நடந்து கொண்டிருக்கிறது விபத்துக்கான காரணம் அதாவது கடலூர் இருந்து வரும் பேருந்துகள் வெளியூரில் இருந்து வரும் டூரிஸ்ட் பேருந்துகள் வெளியூர்ந்து வரும் பெரிய பேருந்துகள் வரும்போது மரப்பாலம் மூப்பனார் சிலை சந்திப்பில் குழக்கும் நிலை ஏற்படுகிறது அப்பொழுது பெரிய வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள் ஏனென்றால் திண்டிவனம் விழுப்புரம் சென்னை எந்த பக்கம் போவதன்று வழி தெரியாமல் நேராக செல்கிறார்கள் அப்பொழுது தடுமாற்றம் வருகிறது எந்த பக்கம் செல்வதும் தெரியாமல் இடது பக்கம் திரும்பும்போது நேராக செல்லும் வாகனம் மீது இடிபடுகிறது இதற்கு காரணம் ஏற்கனவே மரப்பாலம் சந்திப்பில் அதாவது நாகாத்தம்மா கோயில் இருந்து நூறு மீட்டர் தொலைவில் புதுச்சேரி நோக்கி ஒரு பெயர் பலகை இருந்தது அதில் திண்டிவனம் விழுப்புரம் சென்னை இடது புறமாகவும் புதுச்சேரி அரவிந்த் ஆசிரமம் மணக்குள விநாயகர் நேராக செல்லவும் குறியீடுகள் பெயர் பலகை இருந்தது அது இப்பொழுது இல்லை கடந்த கடைசியாக ஒரு புயல் வீசியதில் விழுந்துவிட்டது அது கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இருக்கும் அதன் பின் இதுவரையும் அந்தப் பெயர் பலகை வைக்க வில்லை அரசு முன்வரவில்லை உடனே இதை கவனத்தில் கொண்டு அந்தப் பெயர் பலகை உடனே நிறுவ வேண்டும் அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக மரப்பாலத்தில் மூப்பனார் சிலை சந்திப்பில் தொடர்ந்து ரெண்டு காவலர்களை நியமிக்க வேண்டும் என்று மிகவும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
K.லிங்கசாமி
தலைவர்,
வன்னிய முன்னேற்ற இயக்கம்,
புதுச்சேரி.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்