புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி ஆகியோர் குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி மகளிர் காங்கிரசார் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. வி.வைத்தியலிங்கம் அவர்கள், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மண்ணடிப்பட்டு தொகுதியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி, புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி திருமதி. ஏ.ஆர்.நிஷா அவர்கள் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்றிணைந்து விருப்பமனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியான திருமதி. ஏ.ஆர்.நிஷா அவர்களும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி, மாநில மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பமனு தாக்கல் செய்தனர். குறிப்பாக, முதலியார்பேட்டை, உப்பளம், உருளையன்பேட்டை அல்லது வில்லியனூர் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அவர் களம் இறங்க வேண்டும் என அந்த மனுவில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது ஏராளமான மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்