புதுச்சேரி கவியரசு கண்ணதாசன் இலக்கிய கழகம் மற்றும் புதுவை பல்கலைக்கழகம் சுப்பிரமணிய பாரதியார் தமிழ் மொழி மற்றும் இலக்கியபுளம் இணைந்து நடத்திய கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்க விழா கவியரசு கண்ணதாசன் இலக்கிய கழகத்தின் 14 வது ஆண்டு விழா இன்று புதுச்சேரி பல்கலைக்கழக கருத்தரங்கு வளாகத்தில் நடைபெற்றது விழாவில் தலைமை விருந்தினராக புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார் விழாவிற்கு கோதண்டராமன் மதன்குமார் குமரன் கஜேந்திரன் ராமபத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வரவேற்புரையை புதுவை பல்கலைக்கழக தமிழியர் புலம் துறைத் தலைவர் முனைவர் ரவிக்குமார் ஆற்றினார் நோக்க உரையை கண்ணதாசன் இலக்கியக் கழக தலைவர் தேவதாஸ் ஆற்றினார் தொடக்க உரையினை புதுவை பல்கலைகழகம் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் கிளமெண்ட் சகாயராஜ் லூர்து ஆற்றினார் வாழ்த்துறையை கண்ணதாசன் இலக்கியக் கழக நிறுவனர் கோவிந்தராஜ் செயலாளர் அருள் செல்வம் மற்றும் முனைவர் ஸ்ரீவித்யா பூங்குழலி பெருமாள் ஆகியோர் ஆற்றினார்கள் இதில் கண்ணதாசன் விருதினை கவிஞர் எழுத்தாளர் மற்றும் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் யுக பாரதிக்கு வழங்கப்பட்டது. இதில் திரளான தமிழறிஞர்கள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!