புதுச்சேரி மாநில பளுதூக்கும் சங்கம் சார்பில், சர்வதேச பயிற்சியாளர் ஜி. பார்த்திபன் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி மற்றும் பரிசு வழங்கும் விழா நேற்று (ஜூலை 5, 2026) மாலை சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில், வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. ரவிக்குமார், முன்னாள் அமைச்சர் எம். கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. அசோக்பாபு, முதலியார்பேட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆர். இனியன், மனிதநேய மக்கள் கட்சி இ.விநாயகயம், சார்பதிவாளர் வி. சிவசாமி, இளநிலை பொறியாளர் எஸ். வெங்கடேசன், நோட்டரி வழக்கறிஞர் வி. செந்தில், முதலியார்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் பி. தங்கமணி மற்றும் ஜி. பார்த்திபன் அவர்களின் மகன் பி. பிரித்திப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி மாநில பளுதூக்கும் சங்கம் செய்திருந்தது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்