புதுச்சேரி:
புதுவை மாநில பாட்டாளி தொழிற்சங்க பேரவையின் சார்பாக, புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 140-வது தொழிலாளர் தின விழா (மே தினம்) கொடியேற்றத்துடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு பாட்டாளி தொழிற்சங்க பேரவையின் தலைவர் ஜெயபாலன் அவர்கள் தலைமை தாங்கினார். பாட்டாளி தொழிற்சங்கத்தின் சட்ட ஆலோசகர் நாராயண குமார் அவர்கள் முன்னிலை வகித்து சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்கத் தலைவர் சேகர், செயலாளர் ரமேஷ், தொழிற்சங்க பேரவையின் துணைத் தலைவர் திருமலை படையாட்சி, இளவரசன், மகளிர் சங்கத் தலைவி எபேல் வெற்றீனியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், பிஆர்டிசி (PRTC) தொழிற்சங்க நிர்வாகிகள், எல்என்டி (L&T) தொழிற்சங்க நிர்வாகிகள், 108 ஆம்புலன்ஸ் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர். பாண்டியராஜன், முருகன், ராஜாராமன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகப் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.