June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

​புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்!

​ புதுச்சேரியில்
உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த வான்புகழ் வள்ளுவப் பெருந்தகையின் சிறப்பினைப் போற்றும் திருவள்ளுவர் நாளை முன்னிட்டு, புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பில் சிறப்பான முறையில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்விற்கு நாம் தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் ஞானபிரகாசம் தலைமை தாங்கினார். உருளையன்பேட்டை தொகுதி உறவுகள் சிவக்குமார், ராஜ்கமல், குமரேசன், பாலு மற்றும் பாலச்சந்தர் ஆகியோர் நிகழ்வை முன்னெடுத்தனர்.

இந்த வீரவணக்க நிகழ்வில் மாநில மற்றும் தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்:
கௌரிபாக்யராஜ், ரமேசு, வேலவன், இளங்கோவன், திருமுருகன், காமராஜ், பிரிய குமரன், பாண்டி செல்வம், ராஜ்குமார், சங்கர், பாலாஜி, சரவணன், முகுந்தன், சுப்பிரமணி, ஞானமுத்துசெல்வம், கார்த்திக் குமாரி, சசிகாமராஜ், தமிழரசி, ஜெயசூர்யா, ஆனந்து, மனோஜ், ஈழ நிலா, ஈழ வேந்தன் ஆகியோர் ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்.