June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் சங்கமம்: பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நெட்வொர்க் அசோசியேஷன் மாநாடு!

​புதுச்சேரி:

ஆல் இந்தியா நெட்வொர்க் அசோசியேஷன் (NWA) சார்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில நெட்வொர்க்கர்களை ஒருங்கிணைக்கும் மாபெரும் ஆலோசனைக் கூட்டம், இன்று புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.



​தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுச்சேரியிலிருந்தும் பொது அறிவு மற்றும் வணிகத் திறன் மிக்க ஆயிரக்கணக்கான நெட்வொர்க்கர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக ஸ்டால்களில், பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் தங்களது தனித்துவமான பொருட்களை நெட்வொர்க்கர்கள் நேரடி விற்பனை செய்து வருகின்றனர்.

“100% வெள்ளை நிற வணிகம்” மற்றும் “கருப்பு பணமற்ற பொருளாதாரம்” என்ற கொள்கையை வலியுறுத்தி, இத்துறைக்குத் தனிச் சட்டம் வேண்டும் என்ற முழக்கத்துடன் விழா மிகச் சிறப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

​நிறுவனத் தலைவர் M. மனோகரன் தலைமையிலான இந்த நிகழ்வில், வரும் சட்டமன்றத் தேர்தல்களில் நெட்வொர்க் துறையினரின் வாக்கு பலத்தை நிரூபிப்பது குறித்தும், எந்த அரசியல் கட்சிக்குத் தங்களது ஆதரவை வழங்குவது என்பது குறித்தும் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.