August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் அழகு கலை மற்றும் சிகை அலங்கார கலைஞர்கள் நலச்சங்க ஆண்டு பேரவை

புதுச்சேரி: தொழிலாளர் காங்கிரஸுடன் இணைக்கப்பட்ட அழகு கலை மற்றும் சிகை அலங்கார கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் ஆண்டு பேரவை கூட்டம் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜானகி செல்வமணி, சங்கத்தின் பணிகள் குறித்த அறிக்கையை முன்வைத்தார். பொருளாளர் ராஜலட்சுமி வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான வைத்திலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

பேரவை கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் புனிதா, மகேஸ்வரி, புவனேஸ்வரி, எஸ். மகேஸ்வரி, ஜெயந்தி, அமுதவல்லி, செல்வி, உமா, இந்திரா, காமினி, காளீஸ்வரி, சரண்யா உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தொழிலாளர் காங்கிரஸ் மைய நிர்வாகிகள் மோகனகிருஷ்ணன், மீனாட்சி, அந்தோணி குரூஸ், உதயசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேரவை கூட்டத்திற்கு வாழ்த்துரை வழங்கினர்.

இறுதியாக, அழகு கலை மற்றும் சிகை அலங்கார கலைஞர்கள் நலச்சங்கத்தை அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸுடன் இணைக்கப்பட்ட சங்கமாக செயல்படுத்துவது என பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.