September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

*புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த காலாப்பட்டு அரசு பள்ளி; தேசிய அளவில் முதலிடம் பிடித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

புதுச்சேரி காலாப்பட்டு குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் எம்.எல். பூங்காவனம் செட்டியார் அரசு தொடக்கப்பள்ளி, மத்திய அரசின் “சுவச்சதா மற்றும் கிரீன் ஸ்கூல் அவார்டு 2025-26” தேசிய அளவிலான மதிப்பீட்டில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனையை பாராட்டும் வகையில் காலாப்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில், பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் ரமா மற்றும் ஆசிரியர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சுத்தம், பசுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் சுகாதார விழிப்புணர்வு உள்ளிட்ட அம்சங்களில் பள்ளி சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளது. பள்ளியின் இந்த வெற்றி புதுச்சேரி கல்வித்துறைக்கும், காலாப்பட்டு தொகுதி மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக செந்தில் தெரிவித்தார்.