July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புகைப்படச்செய்தி …

புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து தலைமையில் இலங்கை எழுத்தாளர் ப.தினேசு பாலன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதம்தோறும் 20-ஆம் தேதி நடைபெற்று வருகிறது.இந்நிகழ்விற்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார். செயலர் சீனு மோகன்தாசு வரவேற்புரையாற்றினார். இந்கழ்வில் இலங்கை எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் ப.தினேசு பாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் திருக்குறள் கூறினார்கள்.சிறப்பு விருந்தினர் இலங்கை எழுத்தாளர் ப.தினேசு பாலன் அவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பொன்னாடை அணிவித்து பொன்விழா மலர் வழங்கினார்.உடன் முனைவர் ஞான ஜோதி சரவணன், பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன், தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்மாமணி அ.உசேன், கலைமாமணி எம்.எஸ். இராஜா, அ.சிவேந்திரன், கவிஞர் இர.ஆனந்தராசன்,திருவாசகத் தென்றல் ம.சிவகுமார், சம்பத் நீசு மற்றும் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர் .