செஞ்சி, டிச.18
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதி பாஜக. சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பாஜக. வாக்குச்சாவடி முகவர்களுக்கான சிறப்பு பயிலரங்கம் செஞ்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பயிலரங்கத்திற்கு செஞ்சி சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் வி.பி.என். கோபிநாத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கே.ஆர்.விநாயகம், மாவட்ட பொதுச்செயலர் கே. பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர். மாவட்ட செயலர் சிவகாமி வரவேற்றார். பயிலரங்கம் மூன்று அமர்வுகளாக பிரிக்கப்பட்டு முதல் அமர்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட இணை அமைப்பாளர் அன்பழகன் எஸ் ஐ ஆர் பணிகளை அமைப்பு ரீதியாக எப்படி பயன்படுத்த வேண்டும் என விளக்கி கூறினார்.
இரண்டாவது அமர்வில் பேசிய ரங்கராஜன் எ ஸ்ஐஆர் பட்டியலில் இறந்த வர்களின் பெயர்கள் நீக்கப்ட்டுள்ளதாக என கவனமுடன் பார்க்க வேண்டும், திமுகவினர் கள்ள வாக்குகளை சேர்க்க முயற்சித்து வருவதாக தெரிகிறது, இதை விழிப்புடன் இருந்து விரைவில் வெளிய இருக்கும் வாக்காளர் பட்டியலை பார்த்து அப்படி கள்ள வாக்குகள் இருந்தால் அதை நீக்க முயற்சி செய்ய வேண்டும் என கூறினார்.
மூன்றாது அமர்வில் பேசிய முன்னாள் எம்எல்ஏ.வி.ஏ.டி.கலிவரதன் பிரதமர் மோடியின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என கூறினார்
நிகழ்ச்சியில்
மாவட்ட துணை தலைவர்கள் என்.ஏ.ஏழுமலை, ராதே, கோகுல். விஜயலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சரவணன், ஸ்ரீரங் கன், தங்க.ராமு, மேகலா, ஞானமணி, ஏழுமலை, அசோக்குமார், சரவணன், பிரசண்ணா உள்ளிட்ட வாக்குச்சாவடி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்