August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பத்திரிக்கை செய்தி

அண்ணாநகர், நெல்லித்தோப்பில் “ஐஸ் பாப்ஸ் – ஹவுஸ் ஆஃப் கேக்” புதிய கடை திறப்பு

புதுச்சேரி அண்ணாநகர், நெல்லித்தோப்பு பகுதியில் “ஐஸ் பாப்ஸ் – ஹவுஸ் ஆஃப் கேக்” என்ற புதிய கடை இனிதே தொடங்கப்பட்டுள்ளது.

ஐஸ் பாப்ஸ் மூலம் உண்மையான, தரமான பழங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சுவையான ஐஸ் பாப்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம்களும், ஹவுஸ் ஆஃப் கேக் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக வீட்டிலேயே பேக்கிங் செய்து வந்த அனுபவத்துடன் தயாரிக்கப்படும் ஹோம்மேட் கேக்குகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இக்கடை அமைக்கப்பட்டுள்ளது.

புதிய கடையின் திறப்பு விழாவில் திரு. கார்த்திகையன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் (MLA) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார்.

தரமான பொருட்கள், சுத்தமான தயாரிப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து செயல்படும் எங்கள் புதிய முயற்சிக்கு அனைத்து வாடிக்கையாளர்களும் வருகை தந்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஐஸ் பாப்ஸ் – ஹவுஸ் ஆஃப் கேக்
10 ஆண்டுகால ஹோம்மேட் பேக்கிங் அனுபவம்… இனி உங்கள் அருகிலேயே!