நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேரோட்டத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நேற்று காலை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வடம் பிடித்து தேரிழுத்தனர். அப்போது திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஹர்ஷவர்தன் (19) எதிர்பாராத விதமாக தேரின் சக்கரத்திற்கும், சுவருக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.
இதில் நிலைதடுமாறி விழுந்தவர் மீது, தேரின் சக்கரம் ஏறியது. இதில் படுகாயமடைந்தவர் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். தேரோட்ட நெரிசலில் சிக்கி அவரது பள்ளி நண்பரான சஷ்டிகன்(19) இடுப்பு எலும்பு முறிந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். தகவலறிந்து முதல்வர் விஜய் மாணவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார். இதைதொடர்ந்து அமைச்சர்கள் அருண்ராஜ், லோகேஸ் தமிழ்ச்செல்வன், விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர், சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று மாணவர் ஹர்ஷவர்த்தனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்