நாள்: 15.05.2026
நீட் தேர்வு ஏற்கனவே கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து வருகிறது. கோச்சிங் சென்டர், நகர்ப்புற வசதிகள், பொருளாதார பலம் உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கும் கொடும் கருவியாக நீட் மாறியுள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வை ஆன்லைன் முறைக்கு மாற்றும் முயற்சி என்பது கிராமப்புற மாணவர்களின் கடைசி நம்பிக்கையையும் தகர்க்கும் செயல்.
கணினி இல்லை. இணைய வசதி இல்லை. மின்சாரம் கூட ஒழுங்காக கிடைக்காத கிராமங்கள் இன்னும் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஆன்லைன் தேர்வு என்ற பெயரில் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் மருத்துவராகும் வாய்ப்பை முற்றாக தடுக்கும் சதி இது.
ஏழை வீட்டுப் பிள்ளை ஸ்டெதாஸ்கோப் அணியக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு திட்டமிடப்படும் இந்த முயற்சியை தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
எங்கள் கோரிக்கைகள்:
- நீட் தேர்வை ஆன்லைனில் நடத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்
- கிராமப்புற மாணவர்களுக்கு சமவாய்ப்பு மறுக்கும் நீட் தேர்வையே முழுமையாக ரத்து செய்ய வேண்டும்
- மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடம் வழங்க வேண்டும்
மருத்துவம் என்பது பணக்காரர்களின் தனியுடைமை அல்ல. கிராமத்து மாணவர்களின் கனவை நசுக்கும் எந்த முயற்சியையும் மக்கள் சக்தியோடு எதிர்த்து முறியடிப்போம்.
நன்றி
இவண்
சீ.சு.சுவாமிநாதன்
நிறுவன தலைவர்
தேசிய மக்கள் முன்னணி
9787721199
www.dmmparty.com

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!