வந்தவாசி, மார்ச் 19:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா நடைபெற்றது. இயற்பியல் துறை தலைவர்(பொ) முனைவர் பெரியசாமி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் சித.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக, செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் முனைவர் குமார் பங்கேற்று, பட்டப்படிப்பு என்பது வெறும் ஒரு கல்வித் தகுதி மட்டுமல்ல. அது ஒரு மனிதனின் அறிவு, சிந்தனை, மற்றும் வாழ்க்கை நோக்கை மாற்றும் சக்தி கொண்டது. ஒரு மாணவர் பட்டப்படிப்பை முடிக்கும்போது அவர் புத்தக அறிவை மட்டும் பெறுவதில்லை; அதோடு சேர்ந்து ஆராயும் மனப்பான்மை, பிரச்சினைகளை தீர்க்கும் திறன், மற்றும் அறிவியல் சிந்தனை ஆகியவற்றையும் பெறுகிறார். மேலும் இயற்பியல் படித்த மாணவர்கள் கல்வி, ஆராய்ச்சி, பொறியியல், தகவல் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி போன்ற பல துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற முடியும் என உரையாற்றினார்.இவ்விழாவில் கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் மனோகரன், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் மணிமுருகன், ஆங்கில துறைத்தலைவர் சுமதி, உடற்கல்வி இயக்குநர் மற்றும் விலங்கியல் துறை தலைவர் முனைவர் மோகனவள்ளி, தமிழ் துறைத் தலைவர் முதுமுனைவர் எழில் வசந்தன், தா.சுகந்தி உதவிப் பேராசிரியர், உயிர் வேதியியல் துறைத்தலைவர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இயற்பியல் துறை இரா. சேது தொகுப்புரை வழங்கினார். இயற்பியல் துறை ஆ. வேமலா நன்றி கூறினார்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!