திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகின்றது. மணப்பாறை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த நிலையில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வருகின்றது. இதில் வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கி வருகின்றனர். காளைகளும் வீரர்களை தூக்கி வீசி வெற்றி பெற்று வருகின்றது. வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. போட்டியில் 800 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாயும் காளைகள் – காளைகளை அடக்கி அசத்தும் வீரர்கள்

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.