June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி அருகே விபத்தில் சிக்கிய 3 பேர்

மனிதாபிமானத்தோடு தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் எஸ். ரமேஷ்

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவிற்கு திருச்சியில் இருந்து கார் மூலம் மணப்பாறைக்கு வருகை தந்த தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ் ரமேஷ் விழா முடிந்து மீண்டும் காரில் திருச்சியை நோக்கி கான்வாய் வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார்

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சோழன் நகர் அருகே தனியார் கல்லூரி வளாகம் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு ஏற்கனவே விபத்துக்குள்ளாகி மூன்று பேர் உயிருக்கு போராடி வந்தனர் அவர்களை அமைச்சர் எஸ். ரமேஷ் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு போன் செய்தார் ஆம்புலன்ஸ் வாகனம் வேறு பகுதியில் இருந்து வர காலதாமதம் ஆகும் என்று கேள்விப்பட்டவுடன்

சற்றும் எதிர்பார்க்காமல் தனது வாகனத்தில் காயமடைந்த மூவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

விபத்து நடந்த இடத்தில் அமைச்சரைக் கண்டதும் பொதுமக்கள் அவரின் செயலுக்கு மகிழ்ச்சி தெரிவித்து இன்னும் போதுமான ஆம்புலன்ஸ்கள் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி அதிகப்படியான ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து பின்னர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் அவர்களது வாகனத்தில் ஏறி அமைச்சர் எஸ். ரமேஷ் திருச்சிக்கு புறப்பட்டார்