வந்தவாசி, ஏப் 27:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் டாக்டர் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் திண்ணை131 ஆவது நிகழ்வாக டாக்டர் அம்பேத்கரின் புகழுக்கு பெரிதும் காரணம் கற்ற கல்வியா..! அரசியலமைப்பு சட்டமா..! என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தமுஎகச கிளை தலைவர் பூங்குயில் சிவக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் த.சாந்தி வரவேற்றார். சங்க நிர்வாகிகள் ஏ.பி.வெங்கடேசன், கவிஞர் தமிழ்ராசா, எஸ்.இராதாகிருஷ்ணன், கோ.பாரதி மோகன், கா.பரிதா, ஆர்.எஸ்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் அ.ஜ.இஷாக் தொடக்க உரை நிகழ்த்தினார். தோழர் க.வாசு வாழ்த்துரை வழங்கினார். பிறகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் புகழுக்கு பெரிதும் காரணம் கற்ற கல்வியா..! அரசியலமைப்பு சட்டமா..! என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த பட்டிமன்றத்தில் கற்ற கல்வியே! என்ற அணியில் கவிஞர் வீ.தமிழரசன், அரிமா இரா.சரவணன், கல்லூரி மாணவி அ. அப்ரீன் ஆகியோர் பங்கேற்று பேசினர். அரசியலமைப்பு சட்டமே! என்ற தலைப்பில் பேராசிரியர் உ.பிரபாகரன், நல்லாசிரியர் ம.ரகுபாரதி, மாணவி சந்திரமதி ஆகியோர் பங்கேற்று பேசினர். மாவட்ட தமுஎகச தலைவர் கவிஞர் நா.முத்துவேலன் நடுவராக பங்கேற்றார். இறுதியில் அம்பேத்கரின் புகழுக்கு பெரிதும் காரணம் கற்ற கல்வியும் அதனால் இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டமும் தான் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நிகழ்விற்கு முன்னதாக, தென்னாங்கூர் ரஜினி, ஜான்லாரன்ஸ், முனைவர் ம.மகாலட்சுமி ஆகியோர் பாடல்களை பாடினர். இந்த நிகழ்வில் நகர் மன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், எழுத்தாளர் சா.ரஷீனா, பெரணமல்லூர் தமுஎகச கிளை தலைவர் கௌதம் முத்து, செயலாளர் மாலவன், துணைத் தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவை துணை செயலாளர் எம்.பி.வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர் பெ.எட்டியப்பன், ரவி ரங்கநாதன், முனைவர் சீனிவாசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இறுதியில் சங்க பொருளாளர் எஸ்.காசி நன்றி கூறினார்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.