திருச்சி. ஜூலை 14-
அகில பாரத பார்க்கவ குல சங்க நிறுவனத் தலைவர் திருமலை ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம் அருகில் உள்ள தென்கடுக்கை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
இதே போன்று திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள சிறுகளப்பூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்செல்வி மர்ம நபர்களால் கை கால்கள் கட்டப்பட்டு அருகில் உள்ள நீர் நிலையில் சடலமாக கிடந்தார். இந்த சம்பவத்தில்
அந்த கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் வெள்ளையூர் ஊராட்சி பெரியகாடு கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த கயவர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் சரணடைந்தனர் என்றாலும்
தொடர்ச்சியாக பார்க்கவ குல உடையார், மூப்பனார், நயினார் பெருமக்கள் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பத்து பேருக்கு மேல் படுகொலை செய்யப்படுவது எங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த விஷயத்தில் இனியாவது பாரபட்சம் பார்க்காமல் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் நேற்று காட்சி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் திமுக, தவெக ஒன்றாக பயணிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தலுக்கு முன் ஆர்எஸ்எஸ்ன் பிள்ளை தமிழக வெற்றிக் கழகம் என்று கூறிவிட்டு பின்னர் அவர்களுடன் மந்திரி சபையில் பங்கெடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் க்கு குடைச்சல் கொடுப்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியின் மக்கள் தொடர்பு அதிகாரி போல் அனைத்திற்கும் கருத்து கூறுவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் நான் கேட்கிறேன் தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து பயணிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியை வலியுறுத்திய போது
நாங்கள் பாமக இருக்கும் இடத்தில் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு தற்போது மாற்றிப் பேசுவது அவருடைய இரட்டை நிலைப்பாடு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. முதலில் இவர் பாமக வுடன் இணைந்து பயணிக்கட்டும்
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அணி மாறுவது தான் எடுத்த நிலைப்பாட்டை தானே மீறும் வகையில் செயல்பட்டு வருவது நியாயமா? என்று திருமலை எம் ரவி கூறியுள்ளார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்