வந்தவாசி, ஜூலை 02:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் காப்பியங்களில் ஊழ்வினை தத்துவம் என்ற தலைப்பில் காப்பிய அரங்கம் நிகழ்ச்சி பாலாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க தலைவர் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் மா.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் இராஜ பெருமாள் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, மத்திய செம்மொழி தமிழாய்வு மைய மேனாள் பதிவாளர் முனைவர் முகிலை இராசபாண்டியன் பங்கேற்று, ‘காப்பியங்களில் ஊழ்வினைத் தத்துவம்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் செயலாளர் மயில்வாகனன், துணைத் தலைவர் ஸ்ரீதர், பொருளாளர் முருகவேல் உள்ளிட்ட ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். முன்னதாக விதியே விதியே என்ற தலைப்பில் செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் கவிதை வாசித்தார்.
தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற காப்பிய அரங்கம்..!

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்