கோவை டிச:30
கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வரவும் பள்ளி முடிந்து வீட்டுக்கு கூட்டி செல்லவும் தனியார் பள்ளிகள் பஸ் வேன் உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா அவற்றில் போதிய வசதி செய்யப்பட்டுள்ளதா ஆபத்தான காலத்தில் அவசர வழி உள்ளதா என்பது குறித்து கலெக்டர் பவன் குமார் பிஆர்எஸ் மைதானத்தில் ஆய்வு செய்தார்.தனியார் பஸ்களில் ஏறி ஆய்வு நடத்தி கலெக்டர் அங்குள்ள ஒரு வேனில் பொருத்தப்பட்டிருந்த சுத்தியலை எடுத்து அவசர உதவி கதவை தட்டி பார்த்து ஆய்வு செய்தார் மேலும் பள்ளி வாகனங்களில் முதலுதவி மருந்துகள் மற்றும் போதிய இருக்கைகள் செய்தியாக பொருத்தப்பட்டுள்ளதா வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்று விசாரணை நடத்தினார்.
குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்
கோவை மாவட்டத்தில் உள்ள 4 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட 1644 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 2 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பொழுது நிர்ணயிக்கப்பட்ட விதிகள் குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் அவற்றுக்கான அனுமதியை ரத்து செய்துள்ளோம் பள்ளி வாகனங்கள் இயக்கும் டிரைவர்கள் உடல் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் விஸ்வநாதன்,பூங்கோதை மற்றும் அனைத்து வட்டார அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.