July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,20/07/2026.

சேலத்தில் லியோ போஸ்டர் ஸ்டைலில் விஜய்,த்ரிஷா – சர்ச்சையை கிளப்பிய திருவிழா பேனர்- வைரலாகும் போட்டோ.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பெரிய மாரியம்மன் கோவில் பண்டிகையையொட்டி முதல்வர் விஜய் படம் வைக்கப்பட்ட பேனரில் நடிகை திரிஷா சாமி வேடமணிந்தவாறு படம் அச்சிடப்பட்டு இருந்த பேனரால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று விஜய் தீவிரமாகத் தனது அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் சட்டசபையில் அவர் ஆற்றிய உரை, அதற்கு மக்கள் மத்தியில் கிடைத்த மாபெரும் வரவேற்பு மற்றும் சமூக வலைதளங்களில் குவிந்து வரும் பாராட்டுக்கள் என அவரைச் சுற்றி தொடர்ந்து நேர்மறையான கருத்துக்களே உலா வருகின்றன. முதலமைச்சர் விஜய் அரசியல் நகர்வுகள்முதலமைச்சர் விஜய் அரசியல் நகர்வுகள் மற்றும் மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, சட்டமன்ற தேர்தலின் போது விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விவகாரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கதல் செய்திருந்தார். அந்த மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், இதனால் தானும், பிள்ளைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

முதல்வர் விஜய் குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள்

சமீபத்தில் சினிமா தயாரிப்பாளர் திருமணத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா கலந்துக் கொண்டு பேசுப்பொருளானது. அதன்பிறகு முதல்வர் விஜய் குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள விஜய் ரசிகர்கள், “கட்சியின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் இந்தச் சர்ச்சை அமைந்துள்ளது என சமூக வலைதளங்களில் தங்களது கடும் கண்டனங்களையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆத்தூர் மாரியம்மன் கோவில் பேனர்
இந்த நிலையில், சேலத்தில் திருவிழா ஒன்றிற்காக வைக்கப்பட்ட பேனரில் நடிகை த்ரிஷாவின் புகைப்படம் மாற்றப்பட்ட விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள இளைஞர்கள் சிலர், தங்களது ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பிரம்மாண்டமான பேனர் ஒன்றை அமைத்துள்ளனர். அந்தப் பேனரின் பின்னணியில் முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் திமுக தலைவரின் பிரபல ஸ்டைலைலில் ‘லியோ’ திரைப்பட போஸ்டர் வடிவமைப்பைப் பயன்படுத்தியுள்ளனர்.

திடீரென மாறிய அம்மன் முகம்
‘திருவிழா’ என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த அந்தப் பேனரின் ஒரு பகுதியில், லியோ படத்தில் இடம்பெற்றது போல, சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நடிகை த்ரிஷாவின் படம் வைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இந்த பேனர் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.ஆனால், திருவிழா நெருங்கிய நிலையில், அம்மன் வழிபாட்டுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக, சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த த்ரிஷாவின் முகத்தை மட்டும் இளைஞர்கள் மாற்றியுள்ளனர். த்ரிஷாவின் முகத்திற்குப் பதிலாக, உக்கிரமான தோற்றம் கொண்ட மாரியம்மனின் முகத்தை அங்கு எடிட் செய்து பொருத்தியுள்ளனர்.தற்போது இந்த பேனர் விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மற்றும் நீதிமன்றம் பலமுறை எச்சரிக்கை
தற்போது தமிழகத்தில் அனுமதியின்றி பொதுஇடங்களில் பேனர்கள் வைப்பது தொடர்பாக அரசு மற்றும் நீதிமன்றம் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளன. கடந்த காலங்களில் பேனர்கள் சரிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளதால், விதிமுறைகளை மீறி பேனர்கள் வைப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில், இந்த சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போதும் இதுபோன்ற பேனர்கள் எவ்வாறு வைக்கப்படுகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், கோவில் திருவிழா என்ற பெயரில் எந்தவொரு படத்தையும் அல்லது வடிவமைப்பையும் அனுமதியின்றி பயன்படுத்தலாமா என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.