சேலத்தில் சாப்பாட்டுக்கு ஏங்கும் மாணவர்கள் – தீஞ்ச சோறும்,தண்ணீர் சாம்பாரும் – மிரட்டும் வார்டன் கதறும் மாணவர்கள்.
சேலத்தில் பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சாப்பாட்டுக்கு ஏங்கும் அவலம் – மிரட்டும் வார்டன் கதறும் மாணவர்கள்.
பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக அரசு விடுதியில் தங்கும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவித்தனர்.
தீஞ்ச சோறும், தண்ணீர் சாம்பாரும் மட்டுமே விடுதியில் வழங்கப்படுவதாக வீடியோ ஆதாரத்துடன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் விடுதியில் சுமார் 70 க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கி சேலம் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு தரமற்ற உணவுகள் வழங்குவதாக கூறி விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று தரமற்ற உணவு வழங்கப்படுவதை வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்கினர்.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் கூறுகையில், “விடுதி வார்டன் இதுவரை விடுதிக்கு வரவில்லை. அவருடைய பெயர் கூட எங்களுக்கு தெரியாது. மேலும் முதலாம் ஆண்டு விடுதியில் சேரும் ஒவ்வொரு மாணவர்களிடமும் சமையலர் 2000 முதல் 3000 ரூபாய் கட்டாயமாக வசூலித்து வருகின்றனர். மீறி உணவு குறைபாடு குறித்து புகார் தெரிவிக்க வார்டனின் போன் நம்பராவது கொடுங்கள் என கேட்டால் நீங்கள் எங்கு புகார் தெரிவிக்க வேண்டுமோ தெரிவித்துக் கொள்ளுங்கள், ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டுகின்றனர். மாணவர்கள் சுகாதாரமான உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று காலை உணவு இல்லை மதிய உணவு இல்லை. தீஞ்ச சோறு மட்டும்தான் இருக்கிறது. அதை சாப்பிட முடியாத அளவிற்கு உணவு தயாரிக்கின்றனர்” என்று குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்