கத்தி கூச்சலிட்ட கடைக்காரர்.
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தம்பட்டி பகுதியை சேர்ந்த சுமதி (40),தனது “ஶ்ரீ ஹரி ஜூவல்லர்ஸ்” வெள்ளி நகைக் கடையில் வியாபாரம் செய்து வருகிறார்.
வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 1 மணியளவில், தலைக்கவசம் அணிந்த ஒரு நபர் கடைக்குள் புகுந்து சுமதியின் மீது மிளகாய்ப் பொடியை தூவி, கொள்ளையடிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மிளகாய்ப் பொடியின் தாக்கத்தை தாங்க முடியாமல் சுமதி பயங்கரமாக கூச்சலிட்டதால், பயந்த அந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்து தப்பிச் சென்றார். சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். பொதுமக்கள், கடைக்காரர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை தெரிவித்து வருகின்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்