செஞ்சி ஏப் 27
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி செக்கோவர் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு
செக்கோவர் தொண்டு நிறுவன இயக்குனர் அம்பிகா சூசை ராஜ் தலைமை தாங்கினார்
இதில் செஞ்சி தாலுக்கா மற்றும் மேல்மலையனூர் தாலுகா பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோடைகால சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வர்த்தக சங்கத் தலைவர் செல்வராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து
தீயணைப்புத்துறை அலுவலர்கள் சிவகுருநாதன் இளங்கோவன் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் பாதுகாப்பு நெறிமுறைகளை விளக்கினர்.
இரண்டு நாள் நடைபெற்ற கோடைகால சிறப்பு முகாமில் மாணவர்கள் ஓவியம் நடனம் பாடல்கள் சிலம்பம் போன்றவற்றில் கலந்துகொண்டு தன் திறமைகளை வெளிப்படுத்தினர் .
முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பேக் நோட் புக் பேனா ஸ்கெட்ச் பென்சில் மற்றும் ஊட்டச்சத்து உணவு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில்
செக்கோவர் தொண்டு நிறுவன அலுவலர்கள் ஜெயசீலன்,ரவீந்திரன் பிலிப், ராஜாராமன், அரசு, குலசேகர், கோடீஸ்வரி, சங்கீதா, பிரசன்னா, ஞானம், சக்திவேல், சிவஞானம், அரவிந்தன், விஜயராகவன், சுரேஷ் பாபு, கவியரசன், சூர்யா மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்