July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சி அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் சேவை பணி ஏற்பு விழா

செஞ்சி ஜூலை 07
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரிமா சங்கம் சார்பில் 2026 – 2027 கான புதிய நிர்வாகிகள் சேவை பணி ஏற்பு விழா நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு செஞ்சி அரிமா சங்கத் தலைவர் பரிமளகந்தி
தலைமை தாங்கினார்
மாவட்டத் தலைவர்கள் டி.ஐ முருகன் சொர்ணலதா, சங்க ஆலோசகர் பரமசிவம் முன்னிலை வகித்தனர்
மாவட்டத் தலைவர் பன்னீர் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட ஆளுநர் சரவணன் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை சேவை பணியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.
இதில் செஞ்சி அரிமா சங்கத் தலைவராக வெங்கடேச பெருமாள் செயலாளராக ரவி,, பொருளாளராக சுப்ரமணி மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்
தொடர்ந்து
முன்னாள் மாவட்ட ஆளுநர் கோபி கிருஷ்ணா சேவை பணிகளை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாராமன்
புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு சேவைகளாக தையல் மெஷின், சலவைத் தொழிலாளிக்கு அயன் பாக்ஸ், அரசு பள்ளிக்கு வாட்டர் பியூரிஃபை மிஷின் , மின்விசிறி, மற்றும்
முதியோர் இல்லம் , ஏ பி எல் மழலையர் பள்ளி ,மனநலம் காப்பகம் ஆகியோர்க்கு அரிசி சிப்பங்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில்
மாவட்ட அவை பொருளாளர் சக்திவேல் மண்டல தலைவர் சஞ்சீவி வட்டாரத் தலைவர் பரிமளகந்தி
மற்றும் மேல்மலையனூர் அவலூர்பேட்டை திருக்கோவிலூர் மணலூர்பேட்டை திண்டிவனம் விழுப்புரம் மற்றும் பல்வேறு அரிமா சங்க நிர்வாகிகள் செஞ்சி அரிமா சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.